என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
- நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
- நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
நாகப்பட்டினம்:
தெற்கு வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
ஏற்கனவே வானிலை மையம் எச்சரிக்கையைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளத்துறையினர் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என தடை விதித்தனர்.
இதனால் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், செருதூர், வேதாரணியம், ஆற்காட்டுதுறை உள்ளிட்ட 27 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று 3வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.
மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானமின்றி வாழ்வா தாரம் பாதித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
மீன் வரத்து இல்லாததால் நாகை மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.