என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமியை மீட்ட வட்டார கல்வி அலுவலர்கள்.
பாட்டியுடன் வீட்டிற்குள் முடங்கி கிடந்த சிறுமி மீட்பு
- பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்ததால் மன அழுத்தம்.
- சிறுமியை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பவித்திரமாணிக்கத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு தரணியா என்ற 12 வயது மகள் உள்ளார்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சரவணகுமார் பிரிந்து சென்று விட்டார். சுசீலா பாம்பு கடித்து இறந்தார். இதனால் பவித்திரமாணிக்கத்தில் உள்ள பாட்டியான சீதாலட்சுமியுடன் (94) தரணிகா வசித்து வந்தார். ஆனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளாகியு ள்ளார்.
இந்நிலையில் இடைநின்ற மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்க்கும் முயற்சியினை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரடாச்சேரி வட்டாரக் கல்வி அலுவலர்கள் விமலா மற்றும் சுமதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி, பவித்திர மாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, இடைநன்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மற்றும் காவல்துறை ஆய்வாளர் மணிமேகலை உள்ளிட்ட குழுவினர் தரண்யாவின் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிறுமியை மீட்டனர். சிறுமிக்கு மனநல ஆலோசனையும் வழங்க ப்பட்டது. பராமரிப்பின்றி குப்பை மேடாக கிடந்த அந்த வீட்டையும் தூய்மைப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தரண்யாவை திருவாரூரில் உள்ள பாத்திமா ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து அங்குள்ள பள்ளியிலேயே படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவாக மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர் கலியபெருமாள், உள்ளூர் பிரமுகர்கள் சந்துரு மற்றும் சங்கர் ஆகியோர் இருந்தனர்.
சிறுமி மீட்கப்பட்ட தகவல் அறிந்த பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிக்கு ஆறுதல் கூறி படிப்பதற்கு ஊக்கமளித்தார்.