என் மலர்
உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளிக்கு சொந்த செலவில் குடிநீர் தொட்டி கட்டி கொடுத்த தலைமை ஆசிரியர்
- இந்த பள்ளியில் கல்வியிலும், விளையா ட்டிலும் மாணவிகள் சிறந்து வருகின்றனர்.
- மாத சம்பளத்தில் ரூ.1.5 லட்சம் செலவில் பள்ளிக்கு இலவசமாக குடிநீர் தொட்டி கட்டி பராமரித்து வருகிறார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சியை சேர்ந்த சூளகிரி பேரிகை செல்லும் ரீங் ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது.
இந்தபள்ளிக்கு சூளகிரி சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து 1835 மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். அவர் களுக்கு 47 ஆசிரியர்கள் வருகை தந்து கல்வி அளித்து வருகின்றனர்.
பொதுவாக இந்த பள்ளியில் கல்வியிலும், விளையா ட்டிலும் மாணவிகள் சிறந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நாகலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். தற்போது வயது மூப்பு காரணமாக மே மாத கடைசியில் பணி ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில் பள்ளி நலனுக்காக மாணவிகள், ஆசிரியர்கள் குடிநீர் வசதிக்காகவும் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் நாகலட்சுமி மாத சம்பளத்தில் ரூ.1.5 லட்சம் செலவில் பள்ளிக்கு இலவசமாக குடிநீர் தொட்டி கட்டி பராமரித்து வருகிறார். அவரை மாணவிகள், ஆசிரியர்கள், பி,டி,ஏ நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.