என் மலர்
உள்ளூர் செய்திகள்
கோவில் மரத்தின் கிளைகளை வெட்டியதால் பொதுமக்கள் உண்ணாவிரதம்
- சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கீழ் தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வன காளியம்மன் சிலை உள்ளது.
- அனுமதி இல்லாமல் மரத்தை வெட்டி இருக்க கூடாது. கோவில் நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கீழ் தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வன காளியம்மன் சிலை உள்ளது. அதன் அருகில் வன்னிய மரம் ஒன்று,புங்கன் மரம் உள்ளது. அதன் அருகில் நைனா காடு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் 1600 சதுர அடி நிலத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டி வருகிறார்.
இவர் நேற்று வன காளியம்மன் சிலை அருகில் உள்ள வன்னிய மர கிளைகளை வெட்டி யுள்ளார். கோவில் மரம் என்பதால் ஆத்திரம் அடை ந்த பொதுமக்கள், கோவில் மரத்தை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் கோவில் அருகாமையில் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறுகையில் கோவில் அனுமதி இல்லாமல் மரத்தை வெட்டி இருக்க கூடாது. கோவில் நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அப்படி இருக்கையில் மரத்தை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இப்போராட்டத்தில் பாமக மாவட்ட தலைவர் மாணிக்கம், ஒன்றிய செய லாளர் வெங்கடேஷ், வெங்கடாசலம் உள்ளி டோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர் பாக குறித்து கிராம் நிர்வாக அலுவலர் ராம சந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.