search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறையமங்கலம் பெருமாள் மலைபிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்
    X

    தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்ற காட்சி.

    இறையமங்கலம் பெருமாள் மலைபிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்

    • பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது.
    • கடந்த 10 நாட்களாக மண்டபக் கட்டளை முடித்து கிரிவலம் வருதல், புஷ்ப பல்லக்கு, ஸ்ரீ ஹனுமந்த வாகனம், கருட வாகனத்தில் கிரிவலம் வருதல், திருக்கல்யாண வைபவம், மாங்கல்ய காரணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் இறையமங்கலம் பெருமாள் மலை இளைய பெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது கடந்த 10 நாட்களாக மண்டபக் கட்டளை முடித்து கிரிவலம் வருதல், புஷ்ப பல்லக்கு, ஸ்ரீ ஹனுமந்த வாகனம், கருட வாகனத்தில் கிரிவலம் வருதல், திருக்கல்யாண வைபவம், மாங்கல்ய காரணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் மாலையில் நடைபெற்றது. முதலில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு தேரோட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதரான இளையபெருமாள் தேரோட்டம் நடைபெற்றது.

    தேரோட்டத்தை ராஜேஷ் குமார் எம்.பி. வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தார். 4 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள கிரிவலப் பாதையில் கோவிந்தா கோஷங்கள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது.

    உப்பு, மிளகு தூவி தேரோட்டத்தை பக்தர்கள் வரவேற்றனர். இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×