என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூரில் அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி
- தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன
- தேர் அலங்கரிக்கப்பட்டு, அதில் திருவுருவ சிலையுடன் தேர்பவனி நடந்தது.
குன்னூர்,
குன்னூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு தேர்பவனி திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அப்போது தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து புனித அந்தோணியார் சர்ச்சில் இருந்து தேவாலயம் வடிவமைப்பில் தேர் அலங்கரிக்கப்பட்டு, அதில் திருவுருவ சிலையுடன் தேர்பவனி நடந்தது. அந்தோனியார் கோவிலில் தொடங்கிய தேர்பவனி குன்னூர் மவுண்ட் ரோடு, ஒய்.எம்.சி கார்னர், மார்க்கெட், டாக்சி ஸ்டாண்ட், பஸ் நிலையம் வழியாக மீண்டும் மவுண்ட் ரோடு வந்து தேவாலயம் சென்றடைந்தது. குன்னூர் அந்தோணியார் தேர்பவனியில் இந்துக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story