search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் திட்ட தொழிலாளர்கள் மறியல்
    X

    தொழிலாளர்கள் சாலை மறியல் செய்த போது எடுத்த படம்.

    100 நாள் திட்ட தொழிலாளர்கள் மறியல்

    • 3 கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்று பணி வழங்குவதால் சிரமம்
    • போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரிக்கு நடந்தே சென்றனர்

    ஆரணி:

    சேத்துப்பட்டு அடுத்த பிலாந்தி கிராம மக்கள் 100 நாள் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.

    400-க்கும் மேற்பட்டோரை 3 பிரிவுகளாக பிரித்து 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுப்புகின்றனர்.

    இந்த நிலையில் ஒரு பிரிவினருக்கு மட்டும் 3 கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்று பணி வழங்குவதால் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதாக 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

    இது குறித்து ஏற்கனவே பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதேபோல் இன்று காலை 100 நாள் திட்டத்திற்கு வந்தபோது வெகுதூரம் அழைத்து சென்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஆரணி -வந்தவாசி பில்லாந்தி கூட்ரோட்டில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பெரணமல்லூர் போலீசார் விரைந்து சென்றனர்.

    மேலும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு நடந்தே சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×