என் மலர்
உள்ளூர் செய்திகள்
வருகிற 25-ந்ேததி காலை உணவு திட்டம் தொடக்கம்
- விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
- விவசாயிகளிடம் அரசு நேரடியாக பால் கொள்முதல் செய்ய வேண்டும்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்தது.
இதில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசியதாவது:-
பயிர் சேதங்கள் ஏற்பட்டால் அதற்கான உரிய இழப்பீடுகளை உடனடியாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி விவசாயிகளுக்கு அரசு வழங்கும் அனைத்து பயன்களும் கிடைக்க வேண்டும்.
விவசாயிகளிடம் அரசு நேரடியாக பால் கொள்முதல் செய்ய வேண்டும். வருவாய்து றையினர் பட்டா மாறுதல் மற்றும் பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகளை விரைவாக முடித்து தர வேண்டும். விவசாயிகளுக்கு விதை நெல்லை மானியத்துடன் வழங்க வேண்டும். கூட்டுறவுத்துறை சார்பில் பகுதி நேர நியாய விலைக்கடையை அமைக்க வேண்டும். விவசாயிகள் அனுப்பும் கரும்புகளுக்கு அரவை ஒப்புகை சீட்டை ஆலை நிறுவனங்கள் காலதாமதமின்றி வழங்க வேண்டும்.
கிராமங்களில் குடிநீர், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தார் சாலை வசதி, இடு காட்டு பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கூறினர்.
தொடர்ந்து பேசிய கலெக்டர் கூறியதாவது:-
பா.முருகேஷ் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது வரை 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஆகஸ்ட் 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் சிறப்பு விண்ணப்ப பதிவு முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்துகொள்ளலாம். வருகிற 25-ந் தேதி அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டமும் தொடங்கப்பட உள்ளது என்றார்.
முன்னதாக மத நல்லிணக்க நாள் உறுதி மொழியை கலெக்டர் தலைமையில் அனைத்து விவசாயி களும் எடுத்து க்கொண்டனர். இதில் வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், நேர்முக உதவியாளர்கள் உமாபதி, தேன்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.