search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தை, மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
    X

    தந்தை, மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

    • பைக் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 28). இ- சேவை மையம் நடத்தி வருகிறார்.

    அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் சரவணன் (30), மற்றொரு சரவணன் (29) உதயகுமார் (33). கூலி தொழிலாளிகள்.

    நேற்று முன்தினம் 3 வாலிபர்களும் பைக்கில் விஜயகுமாரின் கடைக்கு வந்தனர். அப்போது பைக்கை கடையின் முன்பு வெளியே நிறுத்தினர்.

    இதனை கண்ட விஜயகுமாரின் நண்பர் சீனிவாசன் என்பவர் ஏன் கடையின் வெளியே பைக்கை நிறுத்துகிறீர்கள் என்று கேட்டார். அப்போது 3 வாலிபர்களும் சீனிவாசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை பார்த்த விஜயகுமார் ஏன் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என்று கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 3 வாலிபர்கள் விஜயகுமாரை சரமாரியாக தாக்கினர்.

    இதனை தடுக்க வந்த விஜயகுமாரின் தந்தை முனியப்பனை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதில் காயம் அடைந்த விஜயகுமார் மற்றும் முனியப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அனக்காவூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன், உதயகுமார் உள்பட 3 பேரை நேற்று கைது செய்தனர்.

    Next Story
    ×