என் மலர்
உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்
வேங்கிகால்:
திருவண்ணாமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, இவர் திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சேரன் மகன் சதீஸ்குமார் (21) மாணவி 11-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே காதலிப்பதாக கூறி பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் சதீஸ்குமார் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன்.
என மாணவியை மிரட்டியுள்ளார். கடந்த வாரம் மாணவி உடல் நிலை சரியில்லை என தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
மருத்துவ பரிசோதனையில் மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து மாணவி தனது தாயுடன் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சதிஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.