என் மலர்
உள்ளூர் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்
- ஜெயிலர், லால் சலாம் படம் வெற்றி பெற வேண்டுதல்
- நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்
திருவண்ணாமலை:
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தயாரிப்பில் ரஜினி நடித்த லால் சலாம் சினிமா எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக படமாக்கப்பட்டது.
ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் 7 நாட்கள் தங்கி படத்தின் காட்சிகளில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து படம் வெற்றி பெற வேண்டி ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா நேற்று மாலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சம்பந்த விநாயகர் மற்றும் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார்.
ஜெயிலர், லால் சலாம் படம் வெற்றி பெற வேண்டி மகள் ஐஸ்வர்யா அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், நடந்து முடிந்த பவுர்ணமி நாளில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் நேற்று கோவிலுக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பகலில் கொளுத்திய கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் சிலர் கிரிவலம் சென்றனர்.