search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருணை மருத்துவக்கல்லூரியில் 600 படுக்கை வசதியுடன் பன்நோக்கு மருத்துவமனை
    X

    திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரியில் 600 படுக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட பன்நோக்கு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அருகில் அமைச்சர்கள் எ.வ.வேலு, துரைமுருகன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு எம்.பி., மருத்துவக் கல்லூரி துணைதலைவர் எ.வ.குமரன், இயக்குநர் டாக்டர் எ.வ.வே.கம்பன்.

    அருணை மருத்துவக்கல்லூரியில் 600 படுக்கை வசதியுடன் பன்நோக்கு மருத்துவமனை

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    • இதய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணை மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் 600 படுக்கை மற்றும் அதி நவீன வசதிகளுடன் கட்டப்ப ட்டுள்ள பன்நோக்கு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 600 படுக்கைகள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் பன்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    புதிய மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக புதிய மருத்துவமனையின் முகப்பு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணா நிதியின் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து மருத்துவ மாணவர்களுக்கு மடிக்க ணினிகளை வழங்கினார்.

    இதில் பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளு மன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அருணை மருத்துவக் கல்லூரி துணைத்தலைவர் எ.வ.குமரன், மருத்துவ இயக்குநர் டாக்டர் எ.வ.வே.கம்பன், முதல்வர் பொன்சிங், கண்கா ணிப்பாளர் குப்புராஜ், டாக்டர் சேஷாத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கேத் லேப் எனப்படும் இருதய அறுவை சிகிச்சை கூடம் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.

    இந்த நவீன இருதய அறுவை சிகிச்சை கூடத்தின் மூலம் சென்னை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களைக் கொண்டு இதய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா என்பதை அறிய ஆஞ்சியோகிராம், இதயத்திற்கு ரத்தத்தை விநியோகிக்கும் தமனிகள் அடைக்கப்பட்டிருப்பதை திறக்க அளிக்கப்படும் சிகிச்சையான ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை உள்ளிட்ட இதயம் சம்பந்தமான அனைத்து சிகிச்சைகளும் அப்போலோ மருத்துவமனையின் இதய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களைக் கொண்டு சிசிக்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Next Story
    ×