search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு விடும் விழா தொடர்பாக தொழிலாளி மீது தாக்குதல்
    X

    மாடு விடும் விழா தொடர்பாக தொழிலாளி மீது தாக்குதல்

    • 3 பேர் கைது
    • 8 பேர் மீது வழக்கு பதிவு

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த குடையம்பாக்கத்தை சேர்ந்தவர் உமாபதி (வயது 27), இவரது தம்பி பொன்னம்பலம் (21). இவர்கள் இருவரும் கூலி தொழிலாளிகள். அண்ணன், தம்பி இருவரும் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகின்றனர்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் நீலவண்ணன். இவரும் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் எருது விடும் விழாவில் உமாபதி காளை வெற்றி பெற்றது.

    இதனால் நீலவண்ண னுக்கும், உமாபதிக்கும் இடையே காளை வெற்றி பெற்றது சம்பந்தமாகவும், தொழில்போட்டி காரணமாகவும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று உமாபதி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த நீலவண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வயலூர் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி, தென்கழனி சேர்ந்த சரவணன், வெங்க டேசன், சந்தோஷ் ஆகியோர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆத்திரமடைந்த அவர்கள் உமாபதியை சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டினர்.

    இது குறித்து உமாபதி மோரணம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமூர்த்தி, சரவணன், வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் உமாபதியின் தம்பி பொன்னம்பலம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நீல வண்ணன் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×