என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
லாரி டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்
செய்யாறு:
செய்யாறு அடுத்த நூக்காம்பாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). லாரி டிரைவர்.
வளர்புரத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 23). இவர்கள் இருவருக்கும் பணம் கொடுக்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் ராஜேந்திரன் லாரியை ஓட்டிக்கொண்டு வளர்புரத்திற்கு வந்துள்ளார். அப்போது பிள்ளையார் கோவில் அருகே லாரியை நிறுத்தினார்.
இதனைக் கண்ட பார்த்தசாரதி பணம் சம்பந்தமாக ராஜேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டார். லாரியின் கண்ணாடியை உடைத்து ராஜேந்திரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ராஜேந்திரன் செய்யாறு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து பார்த்த சாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story
×
X