என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
- நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கலேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. மனைவி இந்திரா (வயது 52). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஆரணி அடுத்த கீழ்பட்டு பகுதியில் வசிக்கும் தனது தாயாரை பார்ப்பதற்காக இன்று காலை ஆட்டோவில் இந்திரா சென்றார்.
சேத்பட்ரோட்டில் வரும்போது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ஆட்டோவை திருப்பி உள்ளார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த இந்திரா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
ஆட்டோ டிரைவர் உள்பட உடன் பயணித்த வர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் இந்திரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.