என் மலர்
உள்ளூர் செய்திகள்
கருவூலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட வேண்டும்
- ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தல்
- அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மாதாந்திர கூட்டம் அலுவலக மன்ற கூடத்தில் நடந்தது. ஒன்றியக்குழுத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஏ.எஸ் ஆறுமுகம், துணை தலைவர் வாசுகி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், ஒன்றிய வளர்ச்சிக்கான பணிகள் குறித்தும் விவாதங்கள் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சங்கர், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, குப்புசாமி, அனுராதாசுகுமார், பாரதி, மணிமேகலை சேகர், புஷ்பா சதாசிவம், மகேஸ்வரி சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தற்போது பெய்துவரும் மழைகாலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களின் சுகாதாரத்தை சீர் கெடாமல் பாதுகாக்கும் நோக்கில், ஒன்றியத்திற்கு தேவை அடிப்படை வசதிகளை உடனடியாக விரைந்து செயல்படுத்திடவேண்டும் எனவும், கீழ்பென்னாத்தூர் தாலுக்காவாக உருவாகி பல வருடங்கள் ஆகியும் சார் கருவூலம் இன்றுவரை அமைக்கப்படாமல் உள்ளது.
பொதுமக்கள் நலன்கருதி உடனடியாக கருவூலம் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தியும் விவாதித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்வித்துறை, மருத்துவத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.