என் மலர்
உள்ளூர் செய்திகள்
கோவில் பூட்டு உடைத்து அம்மன் நகை திருட்டு
- உண்டியலை உடைக்க முடியாததால் காணிக்கை தப்பியது.
- போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது.
கோவில் பூசாரியாக சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு வழக்கம் போல் கோவில் நடையை பூட்டி விட்டு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த 25 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தாலி, பெட்டகத்தில் இருந்த 2 பித்தளை குத்து விளக்குகள் ஆகியவற்றை திருடி சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை பூஜை செய்வதற் காக கோவிலுக்கு வந்த கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து ஊர் பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தார்.அவர்கள் கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது நகை திருடு போயிருப்பது தெரிய வந்தது. மேலும்
கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டை உடைக்க முடியாததால் காணிக்கை தப்பியது.
இதுகுறித்து தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து கோவிலில் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.