என் மலர்
உள்ளூர் செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் 2023-24-ம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது. மேலாண்மை நிலையத்தின முதல்வர் ரவிக்குமார் வரவேற்றார்.
சரக துணைப்பதிவாளர் மு.வசந்தலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் சித்ரா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் பட்டயப் பயிற்சி வகுப்பினை தொடங்கிவைத்து பேசினார்.
பட்டயப் பயிற்சியின் முக்கியத்துவம், கூட்டுறவு சங்கங்களில் உள்ள வேலை வாய்ப்பு குறித்து விளக்கமளித்தார். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சியாளர்கள் இணைவழியில் நேரடியாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதில் கண்காணிப்பாளர் வேல்முருகன், உதவியாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர். முடிவில் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.