என் மலர்
உள்ளூர் செய்திகள்
நீட் தேர்வு ரத்து குறித்து டிஜிட்டல் கையெழுத்து
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாளை டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை பொது ப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார்.
நாளை காலை கம்பன் மகளிர் கல்லூரி கலையரங்கத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரிய டிஜிட்டல் கையெழுத்து இயக்க தொடக்க விழா நடைபெறுகிறது. விழா விற்கு திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை தலைமை எம்.பி. தாங்குகிறார். பொறியாளர் அணி மாநில செயலாளர் கு.கருணாநிதி, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் பிரவீன் ஸ்ரீதரன், மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் டாக்டர் சவிதா கதிரவன், டிஎம் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு நீட் தேர்வு ரத்து குறித்த டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், தொ.மு.ச. பேரவை செயலாளர் சவுந்தரராசன், நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சு.ராஜாங்கம் நன்றி தெரிவிக்கிறார்.