என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
- பள்ளிகளுக்கு தேவையான கட்டிடங்கள், கழிவறைகள் அமைத்து தர வேண்டும்
- பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்
வேங்கிக்கால்:
தமிழ்நாட்டில் உள்ள கடை கோடி மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் சென்று சேர வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கம் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. பேசினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குழு இணைத் தலைவர் டாக்டர் எம். கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வரவேற்றார். குழுத் தலைவர் சி.என். அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கி பேசினார்.
வங்கிகளில் தொழில் முனைவோருக்கு கடன் உதவிகள் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு தேவையான கட்டிடங்கள், கழிவறைகள் மற்றும் சுற்றுசுவர்கள் அமைத்து தர வேண்டும்.
அரசு மருத்துவமனை களில் அதிக அளவில் பெண் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட வன அலுவலர் அருண்லால், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமார், மகளிர் திட்ட இயக்குனர் சையித் சுலைமான், ஊரக வளர்ச்சி செயற்பொ றியாளர் ராமகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் மந்தாகினி, தனலட்சுமி முன்னோடி வங்கி மேலாளர் கவுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.