search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கத்தி வெட்டில் காயமடைந்த தி.மு.க. பிரமுகர் சாவு
    X

    கத்தி வெட்டில் காயமடைந்த தி.மு.க. பிரமுகர் சாவு

    • 7 பேர் கைது
    • ஜெயிலில் அடைப்பு

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை சின்ன கடைத்தெரு அருகில் உள்ள வடக்கு தெருவில் வசித்து வரும் உதயகுமார் மகன் முத்து, இவர் தி.மு.க. இளைஞர் அணி நகர துணை அமைப்பாளராக உள்ளார்.

    ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 30-ந் தேதி மாலை பணி நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டு முத்து மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர் வேங்கிக்கால் பகுதியில் இருந்து திருவண்ணாமலை நகரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

    இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் மர்ம கும்பல் வந்தனர்.

    திடீரென முத்துவை வழிமறித்து கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.

    படுகாயம் அடைந்த முத்துவை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் திவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    உயிரிழந்த முத்துவின் உடல் வைக்கப்பட்டுள்ள சின்ன கடைத்தெரு பகுதியில் அசம்பா விதங்களை தவிர்க்கும் பொருட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்ப ட்டுள்ளனர்.

    Next Story
    ×