என் மலர்
உள்ளூர் செய்திகள்
மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- 20 சதவீதம் போனஸ் உடனடியாக வழங்க வேண்டும்
- கேங்மேன் பணியாளர்களுக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வு கேட்டு கோஷமிட்டனர்
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திற்கு திருவண்ணாமலை கிழக்கு கோட்ட சி.ஐ.டி.யு தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கினார்.
கோட்டதுணைச் செயலாளர் பாவேந்தன், கீழ்பென்னாத்தூர் பிரிவு நிர்வாகி ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழகத்தில் மின்வாரிய துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும், டெண்டர் முறையினை ரத்து செய்ய வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் உடனடியாக வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் 75 -க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் சங்கர் நன்றி கூறினார்.