search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

    • வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
    • விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100

    திருவண்ணாமலை:

    இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப் படுத்த, 2023-24-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், இயற்கை வேளாண் மையில் சிறந்து விளங்கும்.

    விவசாயிகளுக்கு 'நம்மாழ்வார் விருது' வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்தார்.

    திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குனர் ஹர குமார் கூறியதாவது:-

    நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள், 'அக்ரிஸ் நெட்' இணையதளத்தில் வரும் நவம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும்.

    விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100 ஆகும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் இயற்கை வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும்.

    குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

    இதில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு, நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை குடியரசு தினத்தில் முதல் அமைச்சரால் வழங்கப்படும்.

    முதல் பரிசு ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புடைய பதக்கம், 2-ம் பரிசு ரூ.1.50 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புடைய பதக்கம், 3-ம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புடைய பதக்கம் வழங்கப்படும். நம்மாழ்வார் விருதுக்கான விவரம் மற்றும் விண்ணபிக்கும் வழிமுறைகளை, வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி தெரிந்து கொள்ளலாம்" என தெரிவித்தார்.

    Next Story
    ×