என் மலர்
உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க திரண்டு வாருங்கள்
- அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை
- திருவண்ணாமலைக்கு 22-ந்தேதி வருகிறார்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலைக்கு வருகை தரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க அனைவரும் அலைகடலென ஆர்ப்பரித்து வருமாறு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருவண்ணாமலையில் 22-ந் தேதி நடைபெற உள்ள வட தமிழக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 21-ந் தேதி மாலை 6 மணிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு வருகிறார்.
எல்லோருக்கும் எல்லாம் மற்றும் இட ஒதுக்கீடு எனும் சமூக நீதியை நடை முறைப்படுத்திய சமூக நீதி காவலர், மகளிர், மாணவர்கள், இளை ஞர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோர் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை தீட்டி அதனை திறம்பட செயல்படுத்தி இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலிக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோ காட்டுக்குளம் பகுதியில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
வரவேற்பு நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், என அனைவரும் அணி திரண்டு வந்து எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.