என் மலர்
உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை:
மாற்றுத் திறனாளிகள் நலன் கருதி தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்ப டுத்தப்படும் திட்டங்களுக்கு இ- சேவை இணையதளம் வழி யாக மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பத்திற்கு பிரத்யேக இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய மாற் றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும். கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கிக்கடன் மானியம் விண் ணப்பம், திருமண உதவித் தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை விண்ணப்பம் ஆகிய 5 திட்டங் கள் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்களை இணையதள சேவை மூலம் பயன்படுத்த அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https:/www.tnesevai.tn.gov.in/citizen/registration. aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான ரசீதினை பெற்று கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.