search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையில் சாதுக்களிடம் போலீசார் விசாரணை
    X

    திருவண்ணாமலையில் சாதுக்களிடம் போலீசார் விசாரணை

    • சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது
    • அடையாள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 100-க்கும் மேற்பட்ட சாதுக்கள் உள்ளனர். இவர்களுடன், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களும், சாதுக்கள் வேடத்தில் தங்கியுள்ளனர். மேலும், கஞ்சா மற்றும் சாராயம் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். இவர்களால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, திருவண்ணாமலை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் உள்ளிட்டோர், சாதுக்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது, சாதுக்களிடம் உள்ள அடையாள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும் அவர்களது சொந்த ஊர், பெயர், வயது உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

    Next Story
    ×