என் மலர்
உள்ளூர் செய்திகள்
சாலை அமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
செய்யாறு:
செய்யாறு அடுத்த பாரசூர் பள்ள காலனியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
மழைக் காலங்களில் வேலை சம்பந்தமாக வெளியே செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கடந்த 8 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகி்றோம். ஆனால் இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று செய்யாறு -அணைக்கட்டு பாராசூர் கூட் ரோட்டில் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் சாலை வசதிக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டது.