என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை
Byமாலை மலர்14 Nov 2023 12:35 PM IST
- கலெக்டர் தகவல்
- பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் இன்று அதிகாலை முதல் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்பட்டனர்.
மாவட்ட கலெக்டர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். இந்த மழையால் திருவண்ணா மலை சுற்றியுள்ள ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த மழை விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி நெல் சாகுபடிக்கு மற்றும் வருங்கால மணிலா சாகுபடிக்கு ஏதுவாக இருக்கும் என மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் சாத்தனூர் அணையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
இதனால் கரையோரம் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story
×
X