என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ஏரிமண் கடத்திய லாரி பறிமுதல்
Byமாலை மலர்4 Aug 2023 2:00 PM IST
- சூளைக்கு கடத்தியது தெரியவந்தது
- டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்
கண்ணமங்கலம்:
திருவண்ணாமலை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை வருவாய் ஆய்வாளர் காளிதாசன், கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ரோந்து சென்றார்.
அப்போது காட்டுக்காநல்லூர் பஸ் நிறுத்தம் வழியாக வந்த லாரியை வழிமடக்கி சோதனை செய்தார். அந்த லாரியில் அனுமதியின்றி 6 யூனிட் ஏரி மண்ணை சூளைக்கு கடத்தியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து கண்ணமங்கலம் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார்.
அதன் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரையும் தேடி வருகின்றனர்.
Next Story
×
X