search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்துகளை ஏற்படுத்தும் தெரு நாய்கள்
    X

    சாலையில் சுற்றித்திரியும் தெரு நாய்கள்.

    விபத்துகளை ஏற்படுத்தும் தெரு நாய்கள்

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • வாகனங்களில் செல்வோரை துரத்தி துரத்தி கடிக்கிறது

    புதுப்பாளையம்:

    செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகிறது.

    தெரு நாய்கள்

    நாய்கள் ஒன்றோடு ஒன்று சாலையில் சண்டையிடுவதாலும், வேகமாக சாலையை கடந்து ஓடுவதாலும், கூட்டமாக முக்கிய சாலைகளின் நடுவே நின்று கொண்டு வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.

    மேலும் சாலையில் நடந்து செல்வோரை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் பெண்கள், முதியவர்கள் குறிப்பாக பள்ளி குழந்தைகள் சாலையில் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து செங்கம் பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொது மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    எனவே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரியும் தெரு நாய்களை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என செங்கம் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×