search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காய்ந்துபோன கரும்பு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்
    X

    வேர்புழுக்கள் தொல்லையால் காய்ந்துபோன கரும்பு பயிர்களை படத்தில் காணலாம்.

    காய்ந்துபோன கரும்பு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

    • வேர்ப்புழு தாக்குதலால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
    • பயிர் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்,

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த தலையாம் பள்ளம் கிராமத்தில் விவசாயிகள் 100 ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

    இதேபோல் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் கரும்பு மற்றும் வாழைத்தான் அதிகம் பயிரிடப்படுகிறது.

    12 மாதம் வளரும் இந்த கரும்பு பயிர்கள் வேர்ப்புழு தாக்குதலால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் வாடத் தொடங்கி தற்போது கரும்புகள் காய்ந்துபோனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    தலையாம்பள்ளம் கிராமத்தில் பயிரிட்டுள்ள கரும்பு நிலத்தில் வேர் புழுக்கள் உருவாகி உள்ளது. கரும்பின் வேர்களை புழுக்கள் துளையிட்டு முற்றிலும் நாசம் செய்து விடுகின்றன.

    இதனால் கரும்பு வாடி, வதங்கி முற்றிலும் காய்ந்து விட்டன.

    அனைத்து வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டும் கூட புழுக்கள் சாகவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதோடு, நஷ்ட ஈடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்தனர்.

    Next Story
    ×