என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பைப் உடைந்து சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்
Byமாலை மலர்19 July 2023 1:50 PM IST
- 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் தடை
- சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்
வந்தவாசி:
வந்தவாசி செம்பூர் செல்லும் சாலையில் கூட்டு குடிநீர் குழாய் உள்ளது. இங்கிருந்து 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தக் குழாயின் பழுப்பு லைன் உடைந்துள்ளதால் தண்ணீர் வீணாகி ஆறு போல் செல்கிறது.
இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
×
X