என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை நகர தி.மு.க. செயலாளர் கார்த்திவேல்மாறன் இல்லத் திருமண விழா
- முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
- ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை நகர திமுக செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் – நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருவண்ணாமலை நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் – நிர்மலா வேல்மாறன் ஆகியோரின் மகள் காமினி ரகுநாத் இல்லத் திருமண வரவேற்பு விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஆசி வழங்கி வாழ்த்தினார்.
நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் பட்டு சால்வை வழங்கி முதல் - அமைச்சர் வரவேற்றார். இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, சி.என்.அண்ணாதுரை, மாநில தடகள சங்க துணைத்த லைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் டி.எம்.சண்முகம், தாலுகா வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.ரவிச்சந்திரன், செந்தில் மாறன் ஷெரீப், நகராட்சி ஆண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், நகர பிரமுகர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.