என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுலகம் திறப்பு
- பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள
அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
புதிய அலுவலகத்தை மாவட்ட செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுடன் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலா ளர் சுனில் குமார், நகர செயலாளர் செல்வம், மாணவர் அணி மாவட்ட செயலாளர் சத்யசி வக்குமார், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் பழனி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் அரங்கநாதன், சுரேஷ்குமார், கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் தென்மாத்தூர் கலியபெருமாள், தொப்ப ளான், ராமச்சந்திரன், சரவணன், பாஷ்யம், நகரமன்ற உறுப்பினர்கள் நரேஷ், சிவில் சீனிவாசன், சந்திரபிரகாஷ், வக்கீல் தாஸ், பேரவை மாவட்ட துணைத்தலைவர் ரேடியோ ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் தட்சிணா மூர்த்தி, அடிஅண்ணாமலை சங்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன், நகர அவைத்தலைவர் பழனி, பொருளாளர் ராம்மூர்த்தி, சத்தியபிரகாஷ், கலைச்செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.