என் மலர்
உள்ளூர் செய்திகள்
காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
- கழிவுநீர் கால்வாயை தூர் வார வேண்டும் என வலியுறுத்தினர்
- போக்குவரத்து பாதிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த அடிஅண்ணாமலை ஊராட்சி, மேட்டு கோசாலை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ெபாதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு முறையாக குடிநீர் சப்ளை செய்வதில்லை. இது குறித்து பல முறை புகாார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி இன்று காலை காலி குடங்களுடன் திருவண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர் வார வேண்டும் என வலியுறுத்தினர்.
இது பற்றி தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.