என் மலர்
உள்ளூர் செய்திகள்
ரூ.4 கோடி கொட்டை பாக்கு கடத்தலில் தூத்துக்குடி தொழில் அதிபர் கைது
- மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கண்டெய்னரை சோதனை செய்தனர்.
- கண்டெய்னரின் உட்பகுதியில் கொட்டை பாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
தூத்துக்குடி:
இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடந்த வாரம் கப்பல் மூலம் 40 அடி நீளம் கொண்ட 4 கண்டெய்னர்கள் வந்தது. அதில் பழைய துணிகள் இருப்பதாக குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த கண்டெய்னரை சோதனை செய்தனர். அப்போது கண்டெய்னரின் முன் பகுதியில் துணி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் உட்பகுதியில் கொட்டை பாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான 64 டன் கொட்டைப்பாக்குகள் இருந்தன. அதனை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தூத்துக்குடி வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் கடத்தலில் ஈடுபட்டது தூத்துக்குடியை சேர்ந்த தொழில் அதிபர் ரவிக்குமார் என்ற ரவி பகதூர் என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த அதிகாரிகள் அவருக்கு சொந்தமான நிறுவனங்க ளில் இருந்த முக்கிய ஆவ ணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.