search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் - 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது
    X

    கொடியேற்றம் நடைபெற்றதையும், கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்படுவதையும் படத்தில் காணலாம்.

    திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் - 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது

    • கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
    • விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் பவனி வந்து கோவில் சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலு கந்தம்மன் கோவில் ஆவணித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சிறப்பு அபிஷேகம்

    கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது கோவிலில் இருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்து காலை 5.40 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய ஆறுமுக சுரேஷ் வல்லவராயர் திருவிழா கொடியினை ஏற்றினார்.

    பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி காலை 6.40 மணிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இன்று மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்க ளுக்கு அருள்பாலிக்கிறார். 10 நாட்கள் நடைபெறும் இவ் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் பவனி வந்து கோவில் சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    1-ந் தேதி தேரோட்டம்

    10-ம் திருவிழாவான வருகிற 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கி றது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர், மேற்பார்வையாளர் கார்த்திகேயன், மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள், நகராட்சி உறுப்பினர் கெளரி கார்த்திகேயன், பழக்கடை திருப்பதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×