search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரில் பதுக்கிய 4,704 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்
    X

    காரில் பதுக்கிய 4,704 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்

    • தந்தை-மகன் கைது
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் கிராமத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்டுகளை கார் மூலம் கடத்தி வந்து, ஆள் நடமாட்டம் இல்லாத தனி ஒரு ஷெட்டில் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி. தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் பால்நாங்குப்பம் பகுதிக்கு சென்று நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர். அப்போது நிலத்தில் உள்ள தனி ஷெட் ஒன்றில் கார் மற்றும் 86 பாக்ஸ்கள் கொண்ட மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதனை யடுத்து போலீசார் காரில் பதுக்கி வைத்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 61) மற்றும் அவரது மகன் இளவரசன் (வயது 32) ஆகிய 2 பேரும் கர்நாடக மாநிலத்திலிருந்து 4704 மது பாக்கெட்டுகள் வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதனையெடுத்து போலீசார் தந்தை, மகன் இருவரையும் கைது செய்து மது பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×