என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டில் புகுந்த 10 அடி நீள சாரை பாம்பு
Byமாலை மலர்22 July 2023 2:26 PM IST
- தீயணைப்பு துறையினர் பிடித்தனர்
- ஏலகிரி மலை காட்டுப்பகுதியில் விட்டனர்
ஜோலார்பே ட்டை:
ஜோலா ர்பேட்டையை அடுத்த அம்மை யப்பன் நகர் ஊராட்சி தலைவர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 63).
நேற்று மாலை இவரது வீட்டு வராண்டாவில் உள்ள ஸ்லாப் மீது 10 அடி நீள சாரைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பாம்பை ஏலகிரி மலை காட்டுப்பகுதியில் விட்டனர்.
Next Story
×
X