search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆவின் பால், பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும்
    X

    ஆவின் நிறுவன சார்பில் இயக்குனர்கள் மற்றும் கூட்டுச் செயலாளர்களுக்கான அறிமுக கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன் பேசியபோது எடுத்த படம்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆவின் பால், பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும்

    • பொது மேலாளர் தகவல்
    • உற்பத்தியை தொடங்க 15 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்படுகிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் (ஆவின்) சங்க இயக்குனர்கள் மற்றும் பால்கூட்டுறவு சங்க தலைவர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோடு உள்ள எஸ்ஆர்கே கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொது‌மேலாளர் ரவிக்குமார், துணைப் பதிவாளர் விஸ்வேஸ்வரன் துணைப் பொது மேலாளர் டாக்டர் கோதண்டராமன் கலந்து கொண்டு பேசினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பால் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர்கள், அறிமுகம் செய்யப்பட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய பால் கூட்டுறவு சங்கங்களை திறப்பது குறித்து ஆலோ சனை வழங்கப்பட்டது.

    இறுதியில் மேளாளர் நரசிம்மன் நன்றி கூறினார், பின்னர் கீழ்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உருவாக்கி கொடுத்த முதல மைச்சர், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்க ளுக்கு நன்றி தெரிவித்தும்,.

    புதியதாக தொடங்க ப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள், மாவட்டத்தில் பால் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 50ஆயிரம் லிட்டர் இலக்காக நிர்ணயித்து அதற்கு ஏதுவாக புதிய சங்கங்கள் தொடங்கவும் பால் மற்றும் பால் உற்பத்தி பொ ருட்களின் விற்பனையை அதிகரிக்க பொது இடங்களில் 10 நவீன பாலகங்களை தொடங்கவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    பொது மேலாளர் ரவிக்குமார் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட குழு பால் கூட்டுறவு சங்க கட்டிடம் மாவட்ட நிர்வாகம் அரசு பூங்கா பகுதியில் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    15 நாட்களில் புதிய மாவட்ட பால் கூட்டுறவு சங்க கட்டிடம் திறக்கப்படும், தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்கிறது இதனை உயர்த்தவும் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் திறக்கப்படும்

    பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியை தொடங்க 15 ஏக்கரில் நிலம் தேவைப்படுகிறது. அதற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகம் அளிக்கும் அங்கு பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது எனக் கூறினார்.

    Next Story
    ×