என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
நகராட்சி வருவாய் உதவியாளர் பணியிடை நீக்கம்
By
மாலை மலர்10 Sept 2023 3:06 PM IST

- நகராட்சி ஆணையாளர் உத்தரவு
- முறையாக வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடவில்லை என புகார்
ஆலங்காயம்:
வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இந்த வார்டு பகுதிகளில் பல்வேறு வரி இனங்களை வசூல் செய்வ தற்காக நகராட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி வருவாய் உதவியாளராக (பில் கெலக்டர்) பணி யாற்றி வருபவர் தேவகுமார். இவர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பகுதிகளில் முறையாக வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடவில்லை என்றும், நகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத் தும் வகையில் நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்தது.
அதன் பேரில் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் அவரை பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இது வாணியம்பாடி நகராட்சி ஊழியர்க ளிடையே பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
X