search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூரில் தி.மு.க. செயற்குழு கூட்டம்
    X

    ஜோலார்பேட்டை பகுதியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசிய போது எடுத்த படம்.

    திருப்பத்தூரில் தி.மு.க. செயற்குழு கூட்டம்

    • உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்
    • கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் போன்றவை நடைபெற உள்ளது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டல வாடி ஊராட்சியில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி முன்னிலை வகித்தார். அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

    வாணியம்பாடி பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி ஜோலார்பேட்டை பகுதியில் புதிய பயணிகள் நிழற்கூடம் திறந்து வைத்தல், திருப்பத்தூரில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் போன்றவை நடைபெற உள்ளது.

    இதில் அனைவரும் உற்சாகமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ.சம்பத்குமார், டி.கே.மோகன், சாந்திசீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.வடிவேல், நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன், ம. அன்பழகன், எஸ். சாரதி குமார், ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், கவிதா தண்டபாணி, க. உமா கன்ரங்கம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி. எஸ். பெரியார் தாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×