என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ரெயிலில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு
Byமாலை மலர்19 Jun 2022 2:31 PM IST
- மைசூர் டீ எஸ்டேட்டில் வேலைக்கு சென்ற போது பரிதாபம்.
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து கிடந்தார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காகதிருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்த வர் குறித்து அவரது சட்டைப்பையில் இருந்த செல் நம்பர் மூலம் ெதாடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் மதுரை மாவட்டம், பேரை யூர் தாலுகா பழை யூரை அடுத்த செம் பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 65) என்பதும் இவர் மதுரை திருமங்கலத்தில் இருந்து மைசூருக்கு டீ எஸ்டேட்டில் வேலைக்கு செல்வதற்காக ரெயிலில் சென்றதும் தெரியவந்தது. மேலும் இவருக்கு திருமணம் ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X