search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு விடும் விழாவில் காளை சாவு குறித்து விசாரணை
    X

    மாடு விடும் விழாவில் காளை சாவு குறித்து விசாரணை

    • அறிக்கை அனுப்ப சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
    • ஒரு சுற்றுக்கு மேல் காளையை ஓடவிட்டதால் இறந்து விட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே உள்ள கோவிந்த ரெட்டிபாளையம் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதில் காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக ஓட விடப்பட்டது. காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. போட்டியை காண வந்த பொதுமக்களும் மற்றும் இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர்.

    இதில் காளைகள் முட்டியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் பாகுபலி என்ற காளை ஓட விடப்பட்டது.

    அப்போது பாதையில் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென பாகுபலி காளைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தது.

    பெரும் சோகத்தை ஏற்படுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவிந்தரெட்டி பாளையத்தில் ஒரு சுற்றுக்கு மேல் காளையை ஓடவிட்டதால் அந்த காளை இறந்து விட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து விரிவான விசாரணை செய்து அறிக்கை அனுப்ப சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×