search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் கிளினிக் கட்டிடத்தை சுகாதார இணை இயக்குநர் ஆய்வு
    X

    தனியார் கிளினிக் கட்டிடத்தை சுகாதார இணை இயக்குநர் ஆய்வு

    • மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் சோதனை
    • முறையாக அனுமதி சான்றிதழ்கள் வழங்கிய பின் கிளினிக்குகள் நடத்த அனுமதி என தகவல்

    ஜோலார்பேட்டை:

    தமிழகத்தில் மருத்துவம் படித்து தனியாக கிளினிக் நடத்துபவர்கள் முறையாக விண்ணப்பித்து அதற்கான அனுமதி பெற்ற பின்பு கிளினிக்குகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

    மேலும் தமிழ்நாடு மருத்துவமனை ஒழுங்கு நெறிமுறை சட்டம் 2018-ன் படி பல்வேறு மருத்துவம் படித்தவர்கள் தனியாக கிளினிக் நடத்துவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பின்னர் துறை அதிகாரிகள் கிளினிக் அமைக்கப்பட உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து பின்னர் அனுமதி வழங்குகின்றனர்.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் பகுதியில் தனியார் கிளினிக் அமைக்க மருத்துவம் படித்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

    அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து நேற்று கிளினிக் நடத்தும் கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கட்டிடத்தின் அறையின் அளவு, போதுமான காற்றோட்ட வசதி, பாதுகாப்பு வசதி, குடிநீர் உள்ளிட்டவைகள் குறித்தும் கிளினிக்கில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார்.

    இதனைத் தொடர்ந்து முறையாக அனுமதி சான்றிதழ்கள் வழங்கிய பின்பு கிளினிக்குகள் நடத்த அனுமதிக்கப்படும் என சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துக் கூறினார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×