என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெடுஞ்சாலை இரும்பு தடுப்பில் மினிலாரி மோதி டிரைவர் சாவு
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
வேலூரில் இருந்து ஆம்பூருக்கு கடலை எண்ணெய் பாக்கெட் மற்றும் டின்களை ஏற்றுக்கொண்டு மினி லாரி சென்றது.
லாரியின் முன்பக்கத்தில் டிரைவர் உள்பட 3 பேர் அமர்ந்து பயணம் செய்தனர். மாதனூர் அடுத்த தோட்டாளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பில் மோதியது.
தடுப்பபு வேலியில் பாய்ந்தபடி சென்ற லாரி சிறிது தூரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 2 பேரையும் அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சாலை நடுவில் அமைக்கப்பட்டிருந்த 5 உயர்கோபுர மின்விளக்கு கம்பங்கள் உடைந்து கீழே விழுந்தது. மேலும் லாரியில் ஏற்றி சென்ற எண்ணெய் பாக்கெட்கள் நிரப்பப்பட்ட பெட்டிகளும் சாலையில் சிதறி கிடந்தன.
விபத்து ஏற்படுத்திய மினி லாரியால் வேலூர் மற்றும் திருப்பத்தூர் செல்லும் 2 வழித்தடத்திலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
நீண்ட நேரமாக வாகனங்கள் சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் அணிவகுத்து என்ற வாகன போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தோட்டாளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.