search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடைபாதையை வண்டி பாதையாக அமைத்து தர வேண்டும்
    X

    விவசாயிகள் கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளிக்க வந்த காட்சி.

    நடைபாதையை வண்டி பாதையாக அமைத்து தர வேண்டும்

    • 8 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது
    • கலெக்டரிடம் விவசாயிகள் புகார் மனு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி ஊராட்சிக்குட்பட்ட மோதகுட்டை சுற்றியுள்ள சுமார் 5- க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய குடும்பங்கள், கூலி வேலை செய்யும் குடும்பங்கள் என சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை வாணியம்பாடி, திருப்பத்தூர் நகரங்களுக்கு எடுத்து செல்லவும், கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மாணவிகள் பெத்தகல்லுபள்ளி, நெக்குந்தி, செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

    இதனால் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மோதகுட்டை கிராமத்தில் இருந்து நேரடியாக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலையை அடைய வேப்பம்பட்டு வழியாக நடைபாதை மட்டும் உள்ளது.

    குறித்த நேரத்தில் விரைந்து செல்ல வேண்டும் என்பதற்காக காலம் காலமாக இந்த நடைப்பாதை வழியாக விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சுமந்து கொண்டு வாணியம்பாடி, திருப்பத்தூர் நகரங்களுக்கு எடுத்து சென்று வருகின்றனர்.

    இதனால் நடைப்பாதையை வண்டி வழி பாதையாக ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர்.

    ஆனால் இது நாள் வரை கோரிக்கை மனுக்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் புகார் மனு அளித்தனர்.

    இதே பகுதியில் ஆயுதகாவல்படை மைதானம் அமைய உள்ளது. எனவே காவலர் ஆயுத படை மைதானம் அமைப்பதற்கு முன்பே நடைபாதையை வண்டி வழி பாதையாக மாற்றி

    கிராம மக்கள், விவசாயிகள், மாணவ மாணவிகள் பயன்பெற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×