என் மலர்
உள்ளூர் செய்திகள்
பச்சூர் பகுதியில் நாளை மின்வெட்டு
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படுகிறது
- செயற்பொறியாளர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின்கோட்டத்தை சேர்ந்த கொரட்டி, குனிச்சி, மிட்டூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பச்சூர், தோரணம்பதி, குமாரம்பட்டி, காமாட்சிப்பட்டி, கொரட்டி, எலவம்பட்டி, மைக்காமேடு , சுந்தரம்பள்ளி , தாதகுள்ளனூர், கவுண்டப்பனூர், காக்கங் கரை, குனிச்சி, பல்லப்பள்ளி, அரவமட்றபள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி , கண்ணாலப்பட்டி, சு.பள்ளிப்பட்டு, செவ்வாத்தூர், எலவம்பட்டி, பஞ்சனம்பட்டி, புதூர், மிட்டூர், ஆண்டியப்பனூர், லாலாபேட்டை, ஓமகுப்பம், நாச்சியார்குப்பம் , இருணாபட்டு , பாப்பானூர் , பூங்குளம், பலப்பநத்தம், ஜல்தி, பள்ளத்தூர், ரெட்டிவலசை, குண்டுரெட்டியூர், நஞ்சப்பனேரி, டேம் வட்டம் , ராணி வட்டம் ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.