search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு
    X

    ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    போலீஸ் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு

    • ஆயுத அறையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை பார்வையிட்டார்
    • ஜோலார்பேட்டை ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் ஒளிரும் விளக்குகள் பொருத்தம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் பயன்படுத்தும் பதிவேடுகளள், ஆவணங்கள் மற்றும் ஆயுத அறையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை ஆய்வு செய்தார்.

    மேலும் போலீஸ் நிலையம் மற்றும் குடியிருப்பில் தேவைப்படும் வசதிகள் மற்றும் குறைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து விபத்துக்களை தடுக்கும் வகையில் தாமலேரி முத்தூர் மேம்பாலம், ஜோலார்பேட்டை ஜங்ஷன், சந்தைக்கோடியூர், பொன்னேரி, மண்டலவாடி, கேத்தாண்டப்பட்டி, பச்சூர், உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டு உள்ள ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×