என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ரெயிலில் கடத்திய குட்கா பறிமுதல் ரெயிலில் கடத்திய குட்கா பறிமுதல்](https://media.maalaimalar.com/h-upload/2022/09/03/1756169-kutka.jpg)
X
ரெயிலில் கடத்திய குட்கா பறிமுதல்
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி அருகே ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ஓடும் ரெயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என சோதனை செய்து வந்தனர்.
அப்போது ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் பகுதியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் சோதனை செய்தனர்.
வாணியம்பாடி - கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சோதனை மேற்கொண்ட போது கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை பார்த்த போது அதில் 11 கிலோ குட்கா, பான் மசாலா இருந்தது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ஓடும் ரெயிலில் போதைப் பொருட்கள் கடத்தியது யார் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
X